பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் அண்மையில் நடந்த ரெட்ரோ திரைப்பட அறிமுக விழாவில் நடிகர் விஜய் தேவரகொண்டா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், பஹெல்காம் தாக்குதல் 500 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியின மக்கள் மோதிக்கொண்ட சம்பவத்தைப் போன்றது என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தெலங்கானா பழங்குடியின அமைப்பினர், பழங்குடியின மக்கள் இழிவுபடுத்தும் வகையில் பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக ஹைதராபாத்தைச் சேர்ந்த நபர், நடிகர் விஜய் தேவரகொண்டா மீது எஸ்.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.