மதுரை ஆதீனம் சென்ற வாகனத்தின் மீது மற்றொரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் மிகப்பழமையான சைவ மடங்களில் ஒன்றாகவும், ஞானசம்பந்த பெருமானால் புனரமைக்கப்பட்டதுமான மதுரை ஆதீனத்தின் சமயப் பணி என்பது அளவிட முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார்.
மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் பீடாதிபதி இப்படி ஒரு விபத்தில் சிக்கியது மிகுந்த மன வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனம் சென்ற வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற இரண்டு மர்ம நபர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறிய அவர்,
முதலமைச்சர் ஸ்டாலின் தீர விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.