மதுரை ஆதீனத்தின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்
வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விபத்து திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என திருவாவடுதுறை ஆதீனம் கவலை தெரிவித்து உள்ளார் என கூறியுள்ளார்.
சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்ற கொடூர சம்பவம் குறித்து சுவாமிகள் மன வருத்தத்துடன் தெளிவான கருத்தினை உறுதியாக தெரிவித்து இருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே இவற்றை காவல்துறை கவனத்தில் கொண்டு இந்த விபத்து குறித்து முழுமையான தகவலை திரட்ட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், மதுரை ஆதீனத்தின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.