ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கிராம பகுதியில் உலா வரும் காட்டு யானைகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் வனத்தை விட்டு வெளியேறும் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன.
அந்தவகையில், இரண்டு காட்டு யானைகள் அருளவாடி கிராமத்தில் உலா வருகின்றன. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.