திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், 2-ஆம் நாள் சித்திரை வசந்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் அண்ணாமலையார் கோயிலில் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெற்று வருகிறது.
விழாவின் 2-வது நாளில் அண்ணாமலையாருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து உண்ணாமுலை அம்மனுடன் அலரிப்பூ அலங்கார பல்லக்கு வாகனத்தில் அண்ணாமலையார் எழுந்தளிருனார்.
பின்னர் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள நான்கு கால் மண்டபத்தில் அண்ணாமலையார் மீது பொம்மை பூ போடும் நிகழ்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து பல்லக்கில் உண்ணாமுலை அம்மனுடன் அண்ணாமலையார் மகிழ மரத்தை 10 முறை சுற்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.