ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், நேற்று காலை 2500 கனஅடியாக இருந்தது.
மாலை வரை அதே நிலை நீடித்த நிலையில், நள்ளிரவு முதல் முதல் நீர்வரத்து உயர தொடங்கியது. தமிழக காவிரி நீர் படிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் எதிரொலியாக நீர்வரத்து 6000 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்வரத்து உயர்ந்துள்ளதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.