சேலத்தில் பிறந்தநாளன்று கேக்கிற்கு பதிலாக தர்பூசணி பழங்களை வெட்டி அரியா கவுண்டம்பட்டி கிராம மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வழங்கிய தவறான தகவலால் தர்பூசணி பழங்களின் விற்பனை சரிவடைந்தது.
இந்த நிலையில் அரியா கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள், கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாடும் நபர்களுக்கு தர்பூசணி பழங்களை வழங்கினர். தொடர்ந்து கேக்கிற்கு பதிலாக தர்பூசணி பழங்களை வெட்டி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.