நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வை ஆண்டுக்கு ஒரு த் தேர்வு நாளை பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கிறது. இந்த தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் இருந்து 23 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுத உள்ளனர்.
நீட் தேர்வையொட்டி சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உட்பட தமிழகத்தில் மொத்தம் 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செல்போன் உட்பட மின்னணு சாதனங்களை தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட வழிமுறைகளை தேர்வர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவுறுத்தி உள்ளது.