பிரதமர் மோடியின் சூப்பர் முடிவு : ஜாதிவாரி கணக்கெடுப்பு உண்மையான சமூக நீதி!
Jun 14, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியின் சூப்பர் முடிவு : ஜாதிவாரி கணக்கெடுப்பு உண்மையான சமூக நீதி!

Murugesan M by Murugesan M
May 4, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி, இன்னொரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்திருப்பதாக பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. தனது அரசு இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்ற எதிர்க்கட்சிகளின் தொடர் குற்றச்சாட்டை இந்த ஒற்றை முடிவால் தகர்த்துள்ளார் பிரதமர் மோடி. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நாட்டில் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு, பல்வேறு தரப்பினரின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. நாடு தழுவிய அளவில் இது ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையாகவும் இருந்து வருகிறது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பை ஒரு போதும் நடத்தாது கூறிவந்தன.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில்  நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்,  தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை, பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயகக்  கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, லோக் ஜன சக்தி கட்சி (ராம் விலாஸ்), அப்னா தளம், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி  உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும்  வரவேற்றுள்ளன.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் மட்டும் இல்லாமல்,  INDI இண்டி கூட்டணிக் கட்சிகளும் வரவேற்றுள்ளன.  1881ம் ஆண்டு முதல் 1931ம் ஆண்டு வரையிலான ஆங்கிலேயர் ஆட்சியில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதி குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட்டன.

சுதந்திர இந்தியாவில் 1951ம் ஆண்டில்  எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில், (ST) பட்டியலின பழங்குடியினர், (SC) பட்டியல் சாதியினர், (OBC) பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மற்றும் பொதுப் பிரிவினர்  என நான்கு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டது.

இதன் அடிப்படையில்தான் தேசிய அளவில் அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிலையங்களில்   இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1980ம் ஆண்டு மண்டல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், இட ஒதுக்கீட்டுக்கு 1931 ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு தரவுகளே பயன்படுத்தப்பட்டது.

2011ம் ஆண்டில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதி தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவில்லை. கிட்டத்தட்ட 93 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் முதல்முறையாகச் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நடத்தப்படும் முதல் சாதிவாரியான கணக்கெடுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளதாகக் குற்றம்சாட்டிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காங்கிரஸ் கட்சியும், இண்டி கூட்டணிக் கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஓர் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தி உள்ளன என்றும் விமர்சித்தார்.

மேலும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அரசியல் காரணங்களுக்காகச் சாதி கணக்கெடுப்புகளைச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்க இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த கணக்கெடுப்பு எப்பொது நடைபெறும் என்பது பற்றி தற்போது எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதே, சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு சேர்க்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது, பிரதமர் மோடியின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின் செயல் திட்டம் என்று கூறப்படுகிறது

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மத்திய அரசின் இந்த முடிவு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆட்டத்தை மொத்தமாக காலி செய்திருக்கிறது.  உண்மையான வெளிப்படையான தன்மையுடன் இட ஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிப்பதற்குச் சாதி கணக்கெடுப்பு காலத்தின் தேவை என்று கூறியுள்ள அரசியல் வல்லுநர்கள், உண்மையான சமூக நீதியை வலுப்படுத்துவதற்கும் அனைவருக்கும் சமமான எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும், பிரதமர் மோடி எடுத்துள்ள துணிச்சலான முடிவு  இது என்று பாராட்டியுள்ளனர்.

ஏற்கெனவே, மத்திய அரசு, சமூகத்தின் எந்தப் பிரிவினருக்கும் மனவருத்தம் ஏற்படுத்தாமல்,   பொருளாதார ரீதியாகப் பலவீனமான பிரிவினருக்கு 10 சதவீத  இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modiபிரதமர் மோடிPrime Minister Modi's super decision: Caste-wise census - true social justiceஜாதிவாரி கணக்கெடுப்புசமூக நீதி
ShareTweetSendShare
Previous Post

நாளை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு!

Next Post

ராஜஸ்தான் சர்வதேச எல்லை வழியாக ஊடுருவ முயற்சி – பாகிஸ்தான் ரேஞ்சர் கைது!

Related News

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies