பாகிஸ்தான் அமைதியை விரும்பும் அதே வேளையில் இந்தியாவால் தூண்டப்பட்டால் போருக்கும் தயாராக இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பிலாவால் பூட்டோ தெரிவித்துள்ளார்.
மிர்பூர் காஸ் பகுதியில் நடைபெற்ற ஒரு பேரணியில் பங்கேற்றுப் பேசிய அவர், பாகிஸ்தான் போரை விரும்பாத ஒரு அமைதியான நாடு எனவும், இஸ்லாம் ஒரு அமைதியை விரும்பும் மதம் என்றும் கூறினார்.
ஆனால், யாரேனும் தங்களிடம் இருந்து சிந்து நதி நீரைப் பறிக்க விரும்பினால் அவர்கள் போருக்குத் தயாராக இருக்க வேண்டும் என்றும் பூட்டோ எச்சரித்தார்.