கேரள மாநிலம் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியின் யுபிஎஸ் அறையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகிலுள்ள அவசர சிகிச்சை பிரிவில் இருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், புகை காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலில் கோபாலன், சுரேந்திரன், கங்காதரன் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், தீவிபத்துக்கான காரணத்தை உறுதிப்படுத்த மருத்துவமனையில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் வழக்கம்போல சிகிச்சைகள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.