பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாகிஸ்தானிலிருந்து நேரடி, மறைமுக இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதிக்கான தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும், மறு உத்தரவு வரும் வரை இந்த தடை உத்தரவானது அமலில் இருக்கும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது
தேசியப் பாதுகாப்பு நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடை உத்தரவில் ஏதேனும் விதிவிலக்கு இருந்தால் மத்திய அரசின் முன் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.