திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
கோடை விடுமுறையைக் கொண்டாட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால், சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லக் கூடிய முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்று, ஆமை வேகத்தில் சென்றதால், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் பல்வேறு இடங்களில் சரியான வாகன நிறுத்தம் இல்லாததால், சாலைகளிலேயே வாகனங்களை நிறுத்துவதாகவும், இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
















