தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.
தமிழ் பஞ்சாங்க அடிப்படையில், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ‘கத்திரி வெயில்’ காலம் கணக்கிடப்படுகிறது. இந்த நிலையில் 25 நாட்களுக்கு நீடிக்கும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது.
இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் இயல்பைவிட அதிகரித்துக் காணப்படும். இருப்பினும் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே பல்வேறு பகுதிகளில் வெயில் சதமடிக்கத் தொடங்கி விட்டது. கடந்த ஆண்டு அக்னி நட்சத்திர காலத்தில் கரூரில் 111 டிகிரி வெயில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.