இந்தியாவின் பதிலடிக்குப் பயந்து, எல்லைக்கட்டுப்பாட்டுக்கோட்டில் உள்ள 13 தொகுதிகளில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ள மக்களைப் பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனிடையே பாகிஸ்தான் ராணுவம் உள்ளூர் கிராம மக்களுக்கு ஆயுதப் பயிற்சியை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குதலையடுத்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால், பாகிஸ்தான் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.