அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வால்ட்ஸ், ஐநாவுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்படவிருக்கிறார்.
ஏமனில் ஹௌதி கிளர்ச்சிப் படைகளைக் குறிவைத்து அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக மைக் வால்ட்ஸ் சர்ச்சையில் சிக்கியதாலேயே அவரது பதவி பறிக்கப்பட்டு, புதிய பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் வகித்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.