இந்தியாவுக்கு 131 மில்லியன் டாலர் மதிப்பிலான கடல்சார் பாதுகாப்பு மென்பொருள் உபகரணங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்புதல் அமெரிக்க-இந்திய உறவை மேலும் வலுப்படுத்த உதவும் என அமெரிக்க டிபன்ஸ் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இது, இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசியப் பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.