நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 13 வது காய்கறி கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
கோடை சீசனை அனுபவிக்க நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இவர்களை கவரும் விதமாகத் தோட்டக் கலைத்துறை சார்பில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து காய்கறிகளால் அமைக்கப்பட்டுள்ள மயில், ஜல்லிக்கட்டு காளை, வண்ணத்துப் பூச்சி உள்ளிட்டவற்றைச் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.