காஷ்மீர் தாக்குதல் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விஜய் தேவரகொண்டா, தனது பேச்சு குறித்து விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரெட்ரோ நிகழ்வில் தான் தெரிவித்த ஒரு கருத்து மக்களிடையே கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும், அதற்கு மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
மேலும், எந்த ஒரு உள்நோக்கத்துடனும், யாரையும் புண்படுத்தவும், எந்த ஒரு சமூகத்தையும் குறி வைத்தும் தான் பேசவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.