கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பம் பதிவாகி வருவதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், 25 நாட்கள் நீடிக்கும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28ஆம் தேதி வரை வெயிலின் தாக்கும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பகல் நேரங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தடுக்க வேண்டும் எனவும், நீராகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.