புதுக்கோட்டையில் கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்து 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் தவித்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.
சத்தியமூர்த்தி நகரில் இருந்து புல் பண்ணை வரை செல்லும் பெரிய கழிவுநீர் வாய்க்காலில் கடந்த 3 தினங்களுக்கு முன் பசுமாடு ஒன்று விழுந்துள்ளது. மாடு வெளியே வந்துவிடும் என கண்டுகொள்ளாமல் விட்ட அப்பகுதி மக்கள், மாடு வெளியேவர முடியாமல் தவிப்பதை கண்டு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து சம்பவ இடம் வந்த தீயணைப்புத் துறையினர் பசுமாட்டை பத்திரமாக மீட்டு வெளியே விட்டனர்.