திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்து மீது ஆம்னி வேன் மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஏழு பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணிக்கு ஆம்னி வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். கருவேப்பஞ்சேரி பகுதியில் பயணித்த போது ராமநாதபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்து மீது ஆம்னி வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆம்னி வேனில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.