சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி 62 ரன்களும், பெத்தேல் 55 ரன்களும் குவித்தனர். அதிரடியாக விளையாடிய ஷெப்பர்ட் 14 பந்துகளில் அரைசதம் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது.
இதனை தொடர்ந்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. ஆயுஷ் மாத்ரே – ஜடேஜா ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆயுஷ் மாத்ரே 94 ரன்கள் குவித்தார். சென்னை அணி வெற்றிப்பெற கடைசி ஓவரில் 15 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டது. ஆனால், 12 ரன்கள் மட்டுமே அடித்ததால், 2 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. ஜடேஜா 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனிடையே சென்னை – பெங்களூ அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டிக்கான ஆயிரத்து 200 ரூபாய் டிக்கெட்டுகளை 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வாட்ஸ்அப் கணக்கை ஆய்வு செய்தபோது, முந்தைய போட்டிகளின்போதும் இதே போன்று அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்றது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து, 32 ஐபிஎல் டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.