பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மூதாட்டி பெருமாயி மாரடைப்பால் காலமானார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்த மூதாட்டி பெருமாயி, இயக்குநர் பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியல் மூலம் பிரபலமானார். தண்டட்டியுடன் காணப்படும் மூதாட்டி பெருமாயி நடிகர் சிவகார்த்திகேயனின் மனம் கொத்தி பறவை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த மூதாட்டி பெருமாயி, மாரடைப்பு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். உசிலம்பட்டி அருகே உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டி பெருமாயி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.