துபாயில் இருந்து கோவை வந்த ட்ராவல்ஸ் நிறுவன உரிமையாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது தோழியை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி என்பவர் துபாயில் 20 ஆண்டுகளாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். கடந்த மாதம் 21ஆம் தேதி அவர் கோவை வந்த நிலையில் திடீரென மாயமானர்.
இது குறித்து அவரது மனைவி கோவை பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, போலீசார் சிகாமணியை தீவிரமாக தேடத் தொடங்கினர்.
அப்போது, கோவையை சேர்ந்த சாரதா என்பருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததும், பண பிரச்னையால் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக, ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் சாரதா, துபாயில் இருந்து சென்னை வழியாக கோவை வந்த நிலையில் அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.