டெல்லியில் ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் நகதானியை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சந்தித்து பேசுகிறார்
தற்போதைய பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிலைமை குறித்து இரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
2024 நவம்பரில் லாவோஸ் நடைபெற்ற ASEAN பாதுகாப்பு அமைச்சர்கள் சந்திப்பு நிகழ்வின் போது அமைச்சர்கள் இருவரும் சந்தித்து பேசினர். அதனைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு இருவரும் நாளை சந்திக்கின்றனர்.