பீகாரில் யூத் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கின.
7வது யூத் கேலோ இந்தியா போட்டியில், நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 15ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில், 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களும், 21 வயதுக்குட்பட்ட கல்லுாரி மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
வில்வித்தை, ஜூடோ, வாலிபால், கால்பந்து, ரக்ஃபி, டென்னிஸ், டேபிள் டென்னிஸ், மல்லர் கம்பம், யோகாசனம், கோகோ உள்ளிட்ட 28 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. யூத் கேலோ இந்தியா தொடரின் தொடக்க விழா பீகாரில் மிக பிரமாண்டாக நடைபெற்றது. அப்போது, தொடருக்கான ஜோதியை பெற்றுக்கொண்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், அதனை ஏற்றி வைத்தார்.
அதனை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கலந்துகொண்டு கண்கவர் நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.மாணவர்கள் யோகாசனங்களை செய்து அசத்தியது,
அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.தொடக்க நிகழ்ச்சியில் பீகார் நடன கலைஞர்கள் பாரம்பரிய உடை அணிந்து, அற்புதமாக நடனமாடி அசத்தினர்.தொடக்க விழாவில் இடம்பெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. அடுத்தடுத்து வெடித்த வாணவேடிக்கைகள் வானை வண்ணமயமாக மாற்றின.