பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்றும், பிரதமர் மோடி தலைமையில் மக்கள் விரும்புவது நடக்கும் என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடந்த சமஸ்கிருத ஜாக்ரன் மஹோத்சவ நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசுகையில், பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், ஒரு பாதுகாப்பு அமைச்சராக, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதும், நாட்டைத் தாக்கத் துணிந்தவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பதும், ராணுவ வீரர்களுடன் சேர்ந்து நாட்டின் எல்லை பாதுகாப்பை உறுதி செய்வதும் தனது பொறுப்பு என்று அவர் தெரிவித்தார்.
தீவிரவாதத்துக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சரின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.