இந்திய மொழிகள் பலவற்றிற்கு சம்ஸ்கிருதம்தான் தாய் என மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆயிரத்து 8 சம்ஸ்கிருத உரையாடல் அமா்வுகளின் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, காலனித்துவ ஆட்சிக்கு முன்பே சம்ஸ்கிருதத்தின் வீழ்ச்சி தொடங்கியது என்றும், பிரதமா் மோடியின் தலைமையிலான ஆட்சியில் சம்ஸ்கிருதத்தின் மறுமலா்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
உலகின் புகழ்பெற்ற மொழி அறிஞா்கள் பலரும் சம்ஸ்கிருதத்தை மிக அறிவியல்பூா்வ மொழியாக அங்கீகரித்துள்ளதாக கூறிய அவர், சம்ஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழிகளில் சிதறி கிடக்கும் கையெழுத்து பிரதிகளை சேகரிக்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சமஸ்கிருத மொழியை ஊக்குவிப்பது அதன் மறுமலா்ச்சிக்கானது மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கானது என கூறினார்.