கான்பூர் அருகே தோல் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே உள்ள சாமன் கஞ்ச் பகுதி அடுக்குமாடி கட்டடத்தில் தோல் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இந்த தொழிற்சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தங்கியிருந்த நிலையில், இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 5 பேரும் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.