நீட் நுழைவுத் தேர்வில் உயிரியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ், சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வை, நாடு முழுவதும் இருந்து 22 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் 44 மையங்களிலும், திருச்சியில் 15 மையங்களிலும், நெல்லையில் 13 மையங்களிலும் தேர்வர்கள் நீட் தேர்வை எழுதினர். அனைத்து மையங்களிலும் மதியம் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணிக்கு நிறைவடைந்தது.
இந்நிலையில், நீட் நுழைவுத் தேர்வில் உயிரியல் மற்றும் வேதியியல் பாடப்பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.