கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த டாப் ஸ்லிப் பகுதியில் டிரெக்கிங் சென்ற கேரள இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பாகில் தயூப் ராஜ் மற்றும் அஜ்சல் சைன் ஆகியோர் தமிழக அரசின் ‘டிரெக்கிங் தமிழ்நாடு’ திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்து, டாப் ஸ்லிப் பகுதியில் பயிற்சிபெற்ற வழிகாட்டிகளுடன் டிரெக்கிங் சென்றுள்ளனர்.
அப்போது, அதீத நீரிழப்பு காரணமாக அஜ்சல் சைன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.