ஹிட் தி தேர்ட் கேஸ் படம் 3 நாட்களில் உலகளவில் 83 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி.
இவர் நடித்த ஹிட் தி தேர்ட் கேஸ் படம் கடந்த ஒன்றாம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் வசூல் விவரத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. ரைப்படம் வெளியாகி 3 நாட்களில் உலகளவில் 83 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் பல கோடிகள் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.