மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான தொடரும் படம் வரும் 9-ம் தேதி தமிழில் ரிலீசாகவுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மோகன்லால். இவரது நடிப்பில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான படம் தொடரும்.
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம் . 120 கோடிக்கும் மேல் வசூலித்துத் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், மலையாளத்தைத் தொடர்ந்து வரும் 9-ம் தேதி தமிழில் ரிலீசாகிறது.