கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் ரீ ரிலீசாக உள்ளது.
கடந்த 2000 ஆம் ஆண்டில் அஜித் குமார் நடிப்பில் ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளியானது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம்.
இப்படத்தில் ஐஷ்வர்யா ராய், தபு, மமூட்டி மற்றும் அபாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இத்திரைப்படம் தேசிய விருதையும் பெற்றது. திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் மீண்டும் வெளியிடவுள்ளதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அறிவித்துள்ளார்.