மதுரை சித்திரை திருவிழாவையொட்டி வரும் 8-ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு வரும் 12-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்காக வைகை அணையில் இருந்து வரும் 8-ம் தேதி காலை 6 மணி முதல் 12-ம் தேதி மாலை 6 மணி வரை தண்ணீர் திறந்து விடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்லது.
இதன்மூலம் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்து உறை கிணறுகள் நிறையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.