சேலம் மாவட்டம் மேட்டூரில் நிகழ்ந்த சாலை விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொளத்தூர் மாசிலாபாளையத்தைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர், மனைவி ஜமுனா உடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இருசக்கர வாகனத்தை ஜாமுனா ஓட்டி சென்ற நிலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தரைப்பாலத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.