3 நாட்களில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரித்தது. இப்படத்தில் சசிகுமாருடன் இணைந்து முதல் முறையாக சிம்ரன் ஜோடியாக நடித்திருந்தார்.
கடந்த மே 1-ம் தேதி வெளிவந்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், 3 நாட்களில் இப்படம் 9 கோடி ரூபாய் வசூலைச் செய்துள்ளது.