புதுச்சேரியில் சாலை விபத்தை ஏற்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் கைது செய்யப்பட்டனர்.
அதிவேகமாக வந்த தனியார் பேருந்தினால் இருசக்கர வாகனத்தில் சென்ற வழக்கறிஞர் மற்றும் செவிலியர் கீழே விழுந்தனர். தட்டிக்கேட்ட வழக்கறிஞரைத் தாக்கிய தனியார் பேருந்து ஓட்டுநரும், நடத்துநரும் கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இது தொடர்பாக அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், பேருந்து உரிமையாளரைத் தேடி வருகின்றனர்.