சென்னையில் வைர வியாபாரியை கட்டிப்போட்டு 32 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த வைர வியாபாரி சந்திரசேகரை கட்டிப்போட்டு, 32 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் மற்றும் நகைகளை 4 பேர் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தப்பியோடிய கும்பலை பிடிக்க தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், தப்பியோடிய கும்பல் தூத்துக்குடியில் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து அங்கு வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. தூத்துக்குடி பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 4 பேர் சிக்கினர். அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.