ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் Roadster Xன் விநியோகம் தொடங்கப்படாததால் பைக் பிரியர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில், ஓலா எலக்ட்ரிக் தனது முதல் மின்சார பைக்கான Roadster X- ஐ 74 ஆயிரத்து 999 ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது.
ரோட்ஸ்டர் எக்ஸின் விநியோகங்கள் மார்ச் மாதத்தில் தொடங்கப்படவிருந்தன. ஆனால், இந்த பைக்கின் விநியோகம் தற்போது வரை தொடங்கப்படவில்லை. இதனால் அந்த பைக்கை வாங்க காத்திருப்பவர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.