மாருதி e விட்டாரா எலெக்ட்ரிக் காரின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மாருதியின் முதல் எலெக்ட்ரிக் காரான e விட்டாரா இந்தாண்டு ஜனவரி மாதம், பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய எலெக்ட்ரிக் காரை, ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இந்தியாவில் மாருதி வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதன் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.
மேலும், செப்டம்பர் மாத இறுதியில் மாருதி வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.