சென்னை அருகே உணவில் இறந்த நிலையில் தேரை கிடந்தது தொடர்பாக வாடிக்கையாளர் வீடியோ வெளியிட்ட நிலையில், பிரபல உணவகத்திற்கு சீல்வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பூந்தமல்லி நகராட்சி அலுவலகம் அருகே நாவலடி கொங்குநாடு ரெஸ்டாரன்ட் என்ற பெயரில் தனியார் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.
இந்த ஹோட்டலில் குடும்பத்துடன் ஒருவர் சாப்பிட சென்றுள்ளார். அப்போது உணவகத்தில் வழங்கிய மட்டன் குழம்பு-ல் தேரை இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது அலட்சியமாகப் பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வீடியோ வெளியான நிலையில், திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாவலடி உணவகத்தில் ஆய்வு செய்தனர். மேலும் அந்த உணவக நிர்வாகிகளிடம் நோட்டீஸ் வழங்கிய அதிகாரிகள், ஹோட்டலை மூடி சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.