பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருந்த மேக்ஸ்வெல் காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து விலகிய நிலையில், அதிரடி ஆல்ரவுண்டரை பஞ்சாப் கிங்ஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.
நடப்பு சீசனில் பஞ்சாப் அணியில் இடம் டித்திருந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய தொடரிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், அவருக்குப் பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்செல் ஓவனை 3 கோடி ரூபாய்க்குப் பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.