செங்கல்பட்டு அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் 15 நாட்களுக்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம் பகுதியில் தமிழக அரசின் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.
சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த தங்கள் நெல்லை, 15 நாட்களுக்கும் மேலாக இங்குக் கொண்டு வந்து வைத்துள்ளனர்.
ஆனால் அவர்களின் நெல்லை கொள்முதல் செய்யாமல், பெரிய அளவில் வரும் நெல்லை மட்டுமே அதிகாரிகள் கொள்முதல் செய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.