உத்தரகாண்ட மாநிலம், சமோலியில் உள்ள பத்ரிநாத் கோயில் நடை திறக்கப்பட்டது.
இதையொட்டி, சுமார் 15 டன் மலர்களால் கோயில் வளாகம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மேலும், அங்குத் திரண்டிருந்த பக்தர்கள் மீது ராணுவ ஹெலிகாப்டரிலிருந்து மலர் தூவி வரவேற்பளிக்கப்பட்டது. இதனிடையே, உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி பத்ரிநாத் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன், அங்கிருந்த பக்தர்களுடன் கலந்துரையாடினார். பக்தர்களின் பாதுகாப்புக்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.