பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கோவை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் 4 ஆயிரத்து 500 தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனக் குற்றம்சாட்டினர்.