ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து, ஐஇடி குண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சுரந்தல் பகுதியில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பயங்கரவாதிகளின் மறைவிடத்தைக் கண்டுபிடித்தனர்.
அப்போது, அங்கிருந்து டிபன் மற்றும் வாளிகள் கொண்ட ஐஇடி குண்டுகள் மற்றும் வயர்லெஸ் பெட்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்களை பறிமுதல் செய்து அழித்தனர்.