திருப்பதி ஏழுமலையான் கோயில் முன்பு 14 வயது சிறுமி யோகா செய்து அசத்தினார்.
ஆந்திராவைச் சேர்ந்த சிறுமி சைத்திர ஜீவசக்தி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெற்றோருடன் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், கோயில் முன்பு சுமார் 15 நிமிடத்திற்கு யோகாசனங்களைச் செய்து காண்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யோகாவில் தேசிய அளவிலான பதக்கத்தைப் பெற வேண்டும் என்பதே தமது லட்சியம் எனத் தெரிவித்தார்.