திருச்சூர் பூரம் திருவிழாவை முன்னிட்டு கோபுர நடை வாயிலாக யானை மீது பகவதி அம்மன் எழுந்தருளும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது.
கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் பூரம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நடப்பாண்டுக்கான பூரம் திருவிழாவின் தொடக்க நிகழ்வில், செண்டை மேளம் முழங்க நெய்தலைக்காவு பகவதி சிலையுடன் தெற்கு கோபுர நடையை யானை திறக்கும் விழா விமரிசையாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, இதே கோபுர நடை வாயிலாக, யானை மீது பகவதி அம்மன் எழுந்தருளும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது செண்டை மேளங்கள் மற்றும் வாத்தியக் கருவிகள் வாசிக்கப்பட்டன.
பூரம் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.